தரம் ஒன்று மாணவர்களிற்கான இரண்டாம் தவணை மொடியூல்களை ஏப்ரல் விடுமுறையின் பின்னர் வழங்க திட்டம்.
முதலாம் தரத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகளுக்கான செயற்பாடுகள் அடங்கிய நூல்களை அச்சிடுவதற்குத் தயார் செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் தவணைக்கான செய்முறைச் செயற்பாட்டு நூல்களை ஏப்ரல் பாடசாலை விடுமுறையின் பின்னர் மாணவர்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.2026ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முதலாம் தரத்திற்கான புதிய கல்வி மறுசீரமைப்புச் செயன்முறையின் முன்னேற்றங்கள் இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும். -கல்வி அமைச்சின் செயலாளர்,நாலக கலுவெவ