News

மூன்றாம் தவணை பரீட்சை வினாத்தாள்கள்

தரம் 1 முதல் 11 வரையான மாணவர்களிற்கான மூன்றாம் தவணை கடந்தகால வினாத்தாள்களை எமது இணையதளங்களில் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்! பரீட்சைகள் ஆணையாளர் கோரிக்கை.

நடந்து முடிந்த 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வினாத்தாளுக்கு பதிலளித்த விதம் குறித்து பெற்றோர்கள் மாணவர்களிடம் கேள்வி கேட்பதைத் தவிர்க்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி கோரியுள்ளார்.

உயர்தர பரீட்சை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு.

2025 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை மறுமதிப்பீடு பெறுபேறுகள் வெளியாகின..!

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையின் மறுமதிப்பீடு பெறுபேறுகள் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகளுக்குத் தடை.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களை தயார்படுத்துதல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் தடைசெய்யப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

தொல்பொருள் தளங்களை இலவசமாக பார்வையிட சிறார்களுக்கு வாய்ப்பு.

மத்திய கலாச்சார நிதியத்திற்குச் சொந்தமான திட்டங்களை பார்வையிட 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இலவச அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - 2025 தனியார் வகுப்புக்கள் நடாத்துவதைத் தடை செய்தல்.

எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி நடைபெற உள்ள புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு, ஓகஸ்ட் 6 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பிறகு தரம் 5 மாணவர்களுக்கு தனியார் வகுப்புகள் முன்னெடுக்க தடைசெய்யப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

செலவுகளைக் கட்டுப்படுத்த பாடசாலைகளை மூட வேண்டிய அவசியமில்லை – பிரதமர்

கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை, மேலும் அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் ஒரு நெகிழ்வான செயல்முறையாகும், விவாதங்கள், பரிந்துரைகள் மற்றும் செயல்படுத்தல் சிக்கல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்திருந்தார்.

பாடசாலை நேரத்தை மாற்றியமைக்கு ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு.

பாடசாலை நேரத்தை மாற்றியமைக்கு ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு.