Logo

எங்கள்‌ குறிக்கோள்‌

எண்ணிம உலகத்தில்‌ மாணவர்களிற்கென சிறந்ததொரு கற்றல்‌ கட்டமைப்பை உருவாக்குதல்‌.

அனைத்தும்‌ டிஜிட்டல்‌ மயப்படுத்தப்பட்ட இந்த காலத்தில்‌ பல்வேறு துறைகளும்‌ கால ஓட்டத்துடன்‌ இணைந்து டிஜிட்டல்‌ தளத்தில்‌ பல்கிப்பெருகி வருகின்றன. அந்த வகையில்‌ கல்வித்துறையும்‌ இதற்கு விதிவிலக்கல்ல. இணையவழி கல்வியின்‌ மூலம்‌ கலவித்துறை புதியதொரு பரிமாணத்தை எட்டியுள்ளது. குறிப்பாக கொரோனா பேரிடர்‌ காலத்தில்‌ நாடே முடக்கப்பட்டிருந்தது. இதனால்‌ மாணவர்களிற்கும்‌ பாடசாலை, கல்வி நிறுவனங்களிற்கு இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அந்த இக்கட்டான சூழ்நிலையில்‌ இணையவழி வகுப்புகள்‌ மாணவர்களிற்கு வரப்பிரசாதமாக அமைந்தது என்பதே உண்மை.

இன்று தொழில்நுட்பம்‌ மாணவர்களை தவறான பாதைக்கு இட்டு செல்வதாக ஓர்‌ எண்ண ஓட்டம்‌ மக்கள்‌ மத்தியில்‌ உள்ளது. தொழில்நுட்பம்‌ என்பது ஒரு கருவி மட்டுமே அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம்‌ என்பதில்‌ அதன்‌ ஆக்க மற்றும்‌ அழிவு விளைவுகள்‌ தீர்மானிக்கப்படுகிறது. உளியை கொண்டு சிலையை செதுக்க நினைத்தால்‌ அவன்‌ நிச்சயம்‌ சிற்பி ஆகலாம்‌. இங்கு பிரச்சினையாக காணப்படுவது மாணவர்களை வழிப்படுத்த தொழில்நுட்ப உலகில்‌ ஓர்‌ முறையான கட்டமைப்பு இல்லாமையே. அதை உருவாக்குவதே எங்கள்‌ நோக்கம்‌. அதை நோக்கியே எங்கள்‌ பயணம்‌ அமையும்‌.

எங்கள்‌ பயணம்‌

மாணவர்களிற்கு கல்வி வளங்களை பகிர்வதற்காக சிறிய மாணவர்‌ எண்ணிக்கையுடன்‌ ஓர்‌ Viber Community ஆக 2020.12.23 அன்று எங்கள்‌ பயணம்‌ ஆரம்பித்தது.

எங்கள் சமூக ஊடகங்கள்

அன்றாடம்‌ கல்வி சார்‌ செய்திகள்‌ மற்றும்‌ அறிவுப்புக்கள்‌ எமது Viber மற்றும்‌ WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களின்‌ மூலம்‌ மாணவர்களிற்கு பகிர்ந்து வருகிறோம்‌. இன்றுவரை ஏறத்தாழ 30, 000 மாணவர்கள்‌ எம்மூடாக இந்த சேவையை பெற்று வருகின்றனர்‌.

எங்கள் வலைத்தளம்

அதிகளவான கல்வி வளங்கள்‌ காணப்பட்ட போதிலும்‌ அவற்றை மாணவர்கள்‌ கையாள ஓர்‌ முறையான தளம்‌ இல்லாமை ஓர்‌ பிரச்சினையாக காணப்பட்டது. அதற்கு தீர்வாக எங்களால்‌ பல்வேறு வினாத்தாள்கள்‌ அடங்கிய களஞ்சியமாக 2023 ஜுன்‌ மாதமளவில்‌ எங்கள்‌ இணையத்தளம்‌ மாணவர்களிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று 40, 000 மேற்பட்ட பயனாளர்களுடன்‌ இயங்கி வருகிறது. எங்கள் இணையதளம் கல்வி வளங்களின் ஒரு நூலகமாக செயல்படுகிறது.

எங்களை தொடர்பு கொள்ள

எங்கள் தளத்தைப் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்கள் நிர்வாகியை மின்னஞ்சல் மூலம் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.